யாழில் உள்ள பகுதியொன்றில் வளர்ப்பு பன்றி ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் வடமராட்சி முள்ளி இராணுவ சோதனை சாவடி பகுதியில் நேற்றைய தினம் (29-06-2023) பிற்பகல் 6:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மணல்காடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது பன்றி வேகமாக வீதியை கடக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.
இதனால் நிலை தடுமாறி இளைஞன் வீதியில் வீழ்ந்ததில் காயமடைந்த நிலையில் வீதியால் சென்றவர்களால் மீட்க்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தின் மணல்காட்டை சேர்ந்த 36 வயதுடைய வின்சன் டிபோல் என்பரே காயமடைந்துள்ளார்.
Follow on social media