ரசிகர்களை ஏமாற்றிய துணிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அட 3 மணி நேரமா மெகா சீரியல் பார்த்த கணக்கா, விஜயின் வாரிசு ஓடுகிறது என்று, படத்தைப் பார்த்து காண்டான மக்கள் சரி துணிவை என்றாலும் பார்ப்போம் என்று சென்றால். துணிவு படம் அதை விட சொதப்பலா இருக்கு. ஒரு வங்கியைக் கொள்ளை அடிக்க ஒரு கும்பல் செல்கிறது. ஆனால் அந்த கும்பலை மடக்கிப் பிடிக்கும் தல- அஜித், சொல்கிறார் தானும் கொள்ளையடிக்க வந்திருக்கிறேன் என்று. அதனை விட ஒரு கட்டத்தில், கொள்ளையடிக்க வந்த அஜித், நாற்காலியில் உட்கார்ந்து மக்களின் குறையைக் கேட்கிறார். ஆரம்பம் முதல் பொலிஸ் அதிகாரி சமுத்திரகனி வங்கிக்கு வெளியே வெட்டித் தனமாக நின்றுகொண்டு இருக்கிறார்.

கதை எங்கே செல்கிறது என்று படம் பார்த்த யாருக்கும் புரியவில்லை, தெரியவில்லை.. ஒரு இலக்கே இல்லாத கதை. இதை விட வேடிக்கை என்னவென்றால் பின்னால் உள்ள நபர்களைக் கூட பார்க்காமலே சுட்டுத் தள்ளும் அஜித். ஸ்னைப்பர் குண்டு கூட அஜித்தை தாக்கவில்லை. அப்படிப் பல அபத்தமான காட்சிகளை வைத்து மெகா சொதப்பல் சொதப்பி உள்ளார்கள். சொல்லப் போனால் கதை ஒரு இலக்கை நோக்கிப் போகவில்லை. வங்கியில் அஜித் மக்களைப் பணயக் கைதி போல வைத்திருக்கிறார். ஆனால் உண்மையில் பாவம் திரை அரங்கில் மக்கள் தான் கைதி போல 3 மணி நேரம் உட்கார்ந்து இருந்துள்ளார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

பொங்கலுக்கு வெளியான இந்த 2 திரைப்படங்களுமே மேகா சொதப்பல் தான். இதில் எந்த ஒரு படமும் உருப்படியாக இல்லை. அஜித், விஜய் இருவரும் தலையில் துண்டைப் போட்டு உட்காரவேண்டியது தான். இதில் மிக மிக வேடிக்கை என்னவென்றால். துணிவு பட இயக்குநர் முதன்முதலாக அஜித்தைச் சந்தித்து முழு கதையையும் சொல்லவில்லை. ஒரு கட்டத்தை மட்டும் சொல்லியுள்ளார். அதனைக் கேட்ட அஜித் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் கடைசியில் பார்த்தல் அந்த கட்டம் கூட படமாக்கப்படவில்லையாம். அந்தக் கட்டம் மிஸ்ஸிங்…. அட பாவிகளா இப்படி எல்லாமா படம் நடிப்பீர்கள் ? என்று நாம் கேட்கவில்லை மக்கள் கேட்கிறார்கள்.

Follow on social media
CALL NOW

Leave a Reply