நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயம் 27ம் திகதி அன்றைய தினம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் கடந்த 1985ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த நிலையில் அவரது நினைவாலயம் மேற்குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் திகதி நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் காலை குறித்த பகுதி சேதப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இச்சம்பவத்திற்கு ஊர்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Follow on social media