தற்காலிக வாகன இலக்க தகடுகளை பயன்படுத்த தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வாகன இலக்கத் தகடுகளை வழங்குவதில் நிலவி வந்த சிக்கல் நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்வதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு யாராவது பணம் செலுத்தியிருந்தால் அதனை டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வீதிகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு வழங்கப்பட்டு வந்த அனுமதி எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படுகிறது.

இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பாக டிசம்பர் 15ஆம் திதிக்குப் பிறகு பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting