சூப்பர்ஸ்டார் ரஜினி மிகப்பெரிய உச்சத்தில் இருக்க அவர் இதுவரை கொடுத்த பிரம்மாண்ட ஹிட் படங்கள் தான் காரணம். பல்வேறு காலகட்டங்களில் பல முக்கிய இயக்குனர்களுடன் அவர் கூட்டணி சேர்ந்து ஹிட் கொடுத்து இருக்கிறார்.
அப்படி கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பல படங்களில் ரஜினி நடித்து இருக்கிறார். அதில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் தான் படையப்பா.
படையப்பா படத்தின் ஷூட்டிங் எடுத்து முடித்தபிறகு மொத்தம் 21 ரீல்கள் வந்ததாம். அதை எடிட் செய்து 19 ரீல்கள் ஆக குறைத்து போட்டுக்காட்டி இருக்கிறார் இயக்குனர்.
இதில் எதை நீக்குவது என தெரியாமல் அவர் இருந்த நிலையில், ‘அப்படியே இருக்கட்டும், இரண்டு இண்டெர்வெல் விட்டுடலாம்’ என ரஜினி கூறினாராம்.
ஆனால் மறுநாள் போன் செய்து, ‘அது வேண்டாம், 14 ரீல்களுக்கு எப்படியாவது குறைத்துவிடுங்கள்’ என ரஜினி கூறினாராம். ‘கமல்ஹாசனிடம் பேசினேன், அவர் திட்டினார். இரண்டு இண்டெர்வெல் எல்லாம் தமிழ் சினிமாவுக்கு செட் ஆகாது’ எனவும் ரஜினி சொன்னாராம். அதன் பிறகு தான் படத்தின் நிளத்தை குறைத்தாராம் ரவிக்குமார்.
Follow on social media