கடந்த 36 மணி நேரத்தில் பல நாடுகளில் குறிப்பாக மத்திய தரைக்கடல் நாடுகளில் கடல் நீர் வடியத் தொடங்கியுள்ளது.
அதன் காரணமாக அந்த நாடுகளில் உள்ள மக்கள் பெரும் பதட்டத்திலும் அச்சத்திலும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் சிரியா, எகிப்து, மொராக்கோ, லிபியா, லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், துருக்கி, இத்தாலி, கிரீஸ் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பதிவாகியுள்ளது.
நேற்று துருக்கியில் இருந்தும், இன்று இஸ்ரேலில் இருந்தும் பதிவாகியுள்ளதாகவும், லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் முதன்முறையாக கடல் மட்டம் சுமார் 10 முதல் 15 மீற்றர் வரை குறைந்துள்ளது.