சிறு வயதில் பாலியல் தொல்லை – குஷ்பு கூறிய அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

1980 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.

பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி-ஐ மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லி சென்று ஆணையத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தநிலையில் குஷ்பு சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து அண்மைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும். அது ஒரு பெண் அல்லது பையனை என்பது அல்ல.

என் அம்மா மிகவும் மோசமான திருமணத்தை அனுபவித்துள்ளார். தன் மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதன்.

எனக்கு பாலியல் தொல்லை தொடங்கியபோது எனக்கு 8 வயதுதான். பல ஆண்டுகளாக குடும்பத்திற்காக வாயை மூடிக்கொண்டு இருந்தேன்.

என் அம்மா என்னை நம்பவில்லை. ஆனால் 15 வயதில் அது போதும் என்று நினைத்து அவருக்கு எதிராக பேச ஆரம்பித்தேன்.

எனக்கு அப்போது 16 வயது கூட ஆகவில்லை. எங்களை நிர்கதியாக விட்டு சென்றார்.

அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதுபோன்ற பல சம்பவங்களை அனுபவித்துள்ளேன். இது தான் என்னை சிறுவயதிலேயே மன உறுதியை படைத்தவளாக மாற்றியது என்று கூறினார்.

தற்போது இது திரைவட்டராங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply