இரண்டாம் தவணை இன்று ஆரம்பம் – கல்வியமைச்சு அறிவுறுத்தல்

இந்த வருடத்தின் இரண்டாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 02ம் திகதி வரை இடம்பெறும்.

இந்த காலப்பகுதிக்குள் முடிந்தளவு பாடங்களை கற்பிக்கும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பாடவிதானத்திற்கு புறம்பான வெளிவாரியான செயற்பாடுகளை பாடசாலை நேரத்திற்கு அப்பால்பட்ட சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் இடம்பெறும் வைபவங்களை முடிந்தளவு மட்டுப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply