மீண்டும் நடிக்க வந்த ‘பூவே உனக்காக’ சங்கீதா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனவர் சங்கீதா. இவர் விஜய் ஜோடியாக ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படம் வெற்றி பெற்றது.

இதயவாசல், தாலாட்டு, கேப்டன் மகள், சீதனம், அம்மன் கோவில் வாசலிலே, நம்ம ஊரு ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். 2000-ல் ஒளிப்பதிவாளர் சரவணனை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

இடையில் 2014-ல் மட்டும் ஒரு மலையாள படத்தில் நடித்தார். இந்த நிலையில் 9 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் மலையாள படமொன்றில் நடித்து இருக்கிறார்.

தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்து உள்ளார். தமிழ் படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளன.

Follow on social media
CALL NOW Premium Web Hosting