இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி திங்கட்கிழமை (27) சற்று குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 314 ரூபாய் 82 சதமாகவும் விற்பனை விலை 332 ரூபாய் 58 சதமாகவும் பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை (21) வெளியான நாணய மாற்று விகிதங்களின் படி, டொலரொன்றின் கொள்வனவு விலை 314 ரூபாய் 72 சதமாகவும் விற்பனை விலை 331 ரூபாய் 37 சதமாகவும் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media