யாழ். வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து துணிகர கொள்ளை

யாழ்.வல்வெட்டித்துறை வீட்டைத் திறந்து 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்ற சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஓர் இடத்துக்கு மாலை 5 மணிக்குச் சென்றுவிட்டு திரும்பிய போதே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

11 பவுண் தாலிக்கொடி, 5 பவுண் காப்பு மற்றும் 19 ஆயிரம் ரூபாய் பணம் என்பனவே திருட்டுப்போயுள்ளன என்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது என்று வல்வெட்டித்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.

மதிலால் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த திருடர் முன் கதவைத் திறந்து நகைகளைத் திருடிவீட்டு மீளவும் முன் கதை மூடிவிட்டுச் சென்றுள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸ் தடயவியல் பிரிவு சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply