வீட்டு வளாகத்திலிருந்து துப்பாக்கிகளும் ரவைகளும் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இறம்பைக்குளம் பகுதியில் வீட்டு வளாகத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் 450க்கு மேற்பட்ட ரவைகளும் மீட்கப்பட்டன.

வீட்டின் உரிமையாளரினால் கழிவு தொட்டி ஒன்று அமைப்பதற்காக வீட்டின் பாவனையற்ற வாயில் முன்பாக குழியோன்றினை ஜெ.சி.பி உதவியுடன் இன்று (08.06.2025) காலை தோண்டியுள்ளார். இதன் போது அக் குழியினுள் துப்பாக்கி மற்றும் ரவைகள் காணப்பட்டதனையடுத்து வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவு பொலிஸார் ஆகியோர் வீட்டின் உரிமையாளர் மற்றும் வேலையாட்களிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் குழியினுள் ஒர் பையில் போடப்பட்டு உரைப்பையினுள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை மீட்டெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் தடவியல் பிரிவு பொலிஸார் பாகுப்பாய்வுகளை மேற்கொண்டிருந்தமையுடன் மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் 20வருடங்களுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டமையுடன் அவை ரி-56 ரகத்தினை சேர்ந்த இரு துப்பாக்கிகளும் 450க்கு மேற்பட்ட ரவைகளும் என தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை பொலிஸார் எடுத்து சென்றமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுடன் அவற்றை கொழும்புக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்

Follow on social media
CALL NOW Premium Web Hosting