ஹட்டன் – வட்டவளை கரோலினா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் காயமடை நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணி அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அட்டனிலிருந்து கண்டில் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி வந்த இ.போ.ச. பஸ் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது தனியார் பஸ்ஸின் பின்புறம் இரண்டாகப் பிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது நால்வர் காயமடைந்துள்ள நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த விபத்தில் தனியார் பஸ்ஸின் பின்புறப் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதுதொடர்பான விசாரணைகளை வட்டவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media