துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பல கட்டிடங்கள் சேதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உ்ட்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply