பெண் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை தடுக்க முயற்சித்த கான்ஸ்டபிள் ஒருவர் மூவரின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கிரிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதி
அதேசமயம் பெண்ணும் காயமடைந்து இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர், தாய் மற்றும் சகோதரி ஆகியோரால் கொடூரமாக தாக்கப்பட்டு கடிக்கப்பட்டதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையபெண் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சமூக வலைத்தளங்கள்