வர்த்தக நிலையத்திற்குள் வாள்வெட்டு – உரிமையாளர் படுகாயம், மற்றொருவர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான உரிமையாளர் படுகாயமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையத்தில் இருந்த நபர் கொல்லப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவம் மத்துகம – போபிட்டிய பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த பகுதயில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள்

கூரிய ஆயுதங்களால் அதன் உரிமையாளரையும் மற்றுமொரு நபரையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது பலத்த காயங்களுக்குள்ளான வர்த்தக நிலையத்திற்குள்ளிருந்த நபர் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வேத்தேவ வைத்தியசாலையில் இருந்து நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, குளியாப்பிட்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்த கத்தி, வாள்

மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply