தொடரூந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு .

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வவுனியா – மெனிக்பாம் பகுதியில் தொடரூந்தில் மோதி நபரொருவர் உயிரிழந்தார்.

இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

செட்டிக்குளம் நோக்கி தமது உந்துருளியில் பயணித்த குறித்த நபர் மெனிக்பாம் பகுதியில் தொடரூந்து கடவையை கடக்க முற்பட்டபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply