யாழில் முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதான வீதியில் இலங்கை வங்கி கிளை அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வேகமாக வந்த முச்சக்கர வண்டி, வீதியைக் கடக்க முயன்ற இவரை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, முச்சக்கர வண்டி சாரதி நெடுந்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பாக நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting