பேருவளை, சீனக்கோட்டை பகுதியில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
குறித்த நபர் வெளிநாடு செல்ல தயாராகி கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் முதித அமரசிங்க தெரிவித்தார்.
பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்மட மரபணு பரிசோதனையில் அவருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
குறித்த நபர் தொழில் ரீதியாக இரத்தினக்கல் வியாபாரி எனவும் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
அதன்படி, அவரது நெருங்கியவர் பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அப்பகுதியிலுள்ள அனைத்து இரத்தினக்கல் வியாபாரிகளும் இன்று PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
Follow on social media