ரகசிய திருமணம் செய்த நயன்தாரா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக ரசிகர்கள் சில புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சியின் புதிய பெண் மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசி எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலானது.

இந்நிலையில், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படத்தில், நடிகை நயன்தாரா நெற்றியில் குங்குமத்துடன் இருப்பதை போன்று தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக பதிவிட்டு, சமூக வலைத்தளங்கில் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply