ராமேஸ்வரம் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளால் பரபரப்பு (காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் வீடு போன்று வடிவமைக்கப்பட்ட மர்ம பொருள் கடலில் மிதந்து வந்தால் நேற்று கரை ஒதுங்கி உள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மீனவர்கள் கரை ஒதுங்கிய மர்ம பொருளை பார்த்ததை அறிந்து ஏனையவர்களுக்கு தெரிவித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் கடலில் மிதந்து வந்த மர்ம பொருளை பார்வையிட்டு புகைப்படம் எடுக்க ஒரே இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மிதந்து வந்த மர்ம பொருளின் உள்ளே பல்வேறு வகையான புத்தர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு அந்த சிலைக்கு பச்சரிசி, நெல் உள்ளிட்ட பல்வேறு தானியங்களைக் கொண்டு பூஜை செய்து பரிகாரம் செய்யப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது.

மேலும், கடற்கரையில் குவிந்த பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்தி மிதந்து வந்த மர்ம பொருள் எங்கிருந்து வந்தது? வேறு ஏதேனும் கடத்தல் பொருட்கள் வந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply