பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – இருவர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இன்று (22) பிற்பகல் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அரச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பண்டாரகம ஹொரண வீதியில் ரைகம மில்லகஸ் சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பேருந்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் 27 மற்றும் 54 வயதுடைய பண்டாரகம மற்றும் ஹொரணையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply