வவுனியா நகர மத்தியில் நேற்று (13.05.2023) மாலை 6மணியளவில் மோட்டார் சைக்கிலொன்று திடீரென தீப்பற்றியெரிந்ததுடன் அதில் பயணித்தவர்கள் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருந்தனர்.
ஏ9 வீதியுடாக பயணித்து கொண்டிருந்த TVS சாம் ரக மோட்டார் சைக்கிள் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மித்த பகுதியில் திடீரென தீப்பற்றியெரிந்துள்ளது.
அதில் பயணித்த கணவன் , மனைவி , பிள்ளைக்கு எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லை என்பதுடன் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் பொதுமக்களின் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து நாசமாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
Follow on social media