யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து – சம்பவ இடத்தில் இளைஞர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த 27 வயதுடைய சண்முகலிங்கம் பிரகாஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply