விடுபட்ட பாடங்களைப் பூர்த்தி செய்யத் திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளாா்.

பாடத்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இது முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

2022ஆம் ஆண்டின் முதலாம் தவணை நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply