உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் – கொழும்பில் அமைதியின்மை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் இருந்த பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இன்றுடன் (18) 14 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இந்நிலையில்,போரின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வொன்றின் போது கொழும்பில் இன்று இரு தரப்பினரிடையே அமைதியின்மை ஏற்பட்டது.

சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் இன்று காலை பொரளை பொது மயானத்திற்கு முன்பாக போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த இடத்திற்கு வந்த மற்றுமொரு குழுவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த இடத்திற்கு வந்தவர்கள் விளக்குகளை ஏற்றி உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தனர்.

பின்னர் பொலிஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைக்க நடவடிக்கை எடுத்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply