நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.

மத்திய மருந்து சேமிப்பு மையத்தில் தற்போது சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த பல மாதங்களாக புற்றுநோய் நோயாளிகளுக்கான மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் விளைவாக புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சில வரையறைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting