மன்னார் பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(23) காலை 7.30 மதியம் 12 மணி வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அதிகரித்துள்ள மின் கட்டணத்திற்கு எதிராகவும், அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்து தட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க கோரியும் சுகாதார பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய கோரியும்,சுகாதார துறையினருக்கும் பொது மக்களுக்கும் ஏற்பட்டுள்ள வரிச்சுமையை குறைக்குமாறு வழியுருத்தி மன்னார் பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலதிக நேர கொடுப்பனவை வரையறை இன்றி வழங்கு,அதிகரித்த மின் கட்டணத்தை நீக்கு, சிற்றூழியர்களை அடக்கி ஆழாதே,அரசே அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கு,நியாயமற்ற வரிக்கொள்கையை நீக்கு போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து தராது விட்டால் விரைவில் அனைத்து ஊழியர்களும் இணைந்து சுகயீன போராட்டம் ஒன்றை முன்னெடுக்க போவதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Follow on social media
CALL NOW

Leave a Reply