தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் நேற்றையதினம் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் கைப்பற்றியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின்படி, 600 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அவர்கள் தெவுந்தர பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல் படகுகளும் கைப்பற்றப்பட்டன.
Follow on social media