வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய வட்டக்களரி முறையில் காட்டா விநாயகர் முன்றலில் சினம் கொண்டு சிலம்புடைத்து நீதி நிலைநாட்டிய கற்புக்கரசி கண்ணகி கதை கூறும் கோவலன் கண்ணகி நாட்டுக் கூத்து நாளை சனிக்கிழமை 04.06.2022 இரவு 7:00 மணிக்கு மிகச் சிறப்பான முறையில் வட்டக்களரியேற காத்திருக்கிறது.
சிலப்பதிகாரக் கதையின் வெற்றிவேல் புலவரால் எழுதப்பட்ட கண்ணகி காவியம் முல்லைமோடிக் கோவலன் கூத்தாக உங்கள் கண்களுக்கு கலை விருந்தளிக்க காத்திருக்கிறது.
பிரபல அண்ணாவியார் கலாபூஷணம் என்.எஸ்.மணியம் அவர்களின் நெறியாள்கையிலும் கலைஞர் கஜனின் உதவி நெறியாள்கையிலும் பிரபல ஒப்பனைக் கலைஞர் காந்தனின் உடையலங்கார ஒப்பனையிலும் சிறப்பான ஒலி அமைப்பாளர் ரவி சவுண்ட் அவர்களின் ஒளி ஒலி அமைப்புடன் பாரம்பரிய முறையில் பாரம்பரிய கலைஞர்களின் ஜதார்தமான நடிப்புடன் உங்களுக்கு கலை விருந்தளிக்க காத்திருக்கிறோம்.
பண்பாடு மிகு மண்வாசம் வீசும் முல்லைமோடிக் கூத்தான கோவலன் கண்ணகி நாட்டுக் கூத்தை காணத்தவறாதீர்கள்.
கலைப் பண்பாடு மிக்க எம் கூத்தை பார்க்க வாருங்கள்.
கைதட்டல்களையும் கரகோசங்களையும் கலைஞர்களுக்கு தாருங்கள்.
உங்களை அன்போடு அழைக்கின்றனர் கலைத்தாய் நாடக மண்றம் முள்ளியவளை முல்லைத்தீவு.
கோவலன் கண்ணகி நாட்டுக் கூத்தினை தொலைகாட்சிகளில் நேரலையாக கண்டுமகிழலாம்.
ஊடக அனுசரனை வழங்குவோர்..
கப்பிட்டல் தொலைக்காட்சி
தேடிப்பார் தொலைக்காட்சி
மற்றும் ரா தமிழ் இணைய வலையமைப்பு
நிகழ்ச்சி ஒளிப்பதிவிற்கான அனுசரனையாளர் : விவேகானந்தம் நிதர்சன் (பிரான்ஸ்)
Follow on social media