யாழ். ஊரெழு பகுதியில் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மரணம்

யாழில் சிறுமிகள் மற்றும் ஆசிரியையுடன் போதகர் உல்லாசம்

யாழ். ஊரெழு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் 3 காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் ஹரிபிரணவன் (வயது 29) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் வேலையை முடித்துக்கொண்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஊரெழு பகுதியில் விபத்துக்கு உள்ளானார்.

விபத்துக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் , கடந்த மூன்று மாத கால பகுதியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply