பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொன்ற கொடூரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அர்ஜென்டினா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் ஆரோக்கியமாக பிறந்த 5 குழந்தைகள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துள்ளன.

குழந்தைகளின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என குழந்தைகளின் பெற்றோர் நினைத்ததால் அவர்கள் யாரும் இதுபற்றி போலீசில் புகார் அளிக்கவில்லை. ஆனால் கடைசியாக உயிரிழந்த குழந்தையின் பாட்டி கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைகளின் உடம்பில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுபற்றி விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் உயிரிழந்த 5 குழந்தைகளில் 2 குழந்தைகளின் மருத்துவ பதிவுகளை மறுஆய்வு செய்ததில் அந்த குழந்தைகள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற நர்சு பிரெண்டா அகுவேரோவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்ற 3 குழந்தைகளின் மருத்துவப் பதிவுகளின் மறுஆய்வு நிலுவையில் உள்ள அந்த குழந்தைகளையும் பிரெண்டா அகுவேரோ விஷம் வைத்து கொலை செய்திருப்பார் என நம்பப்படுகிறது. எனினும் மருத்துவ பதிவுகளின் மறுஆய்வுக்கு பின்னரே உண்மை தெரியவரும்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting