தலைமன்னாரில் சிறுவர் கடத்தல் முயற்சி முறியடிப்பு – இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மன்னார்- தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று (11) மதியமளவில் வாகனத்தில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த ஓட்டுநர் இவ்வீதி வழியாக பயணித்த இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி வாகனத்தில் கடத்த முற்பட்ட சமயம் இரு பிள்ளைகளும் தப்பி சென்று கிராமத்தவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கிராம மக்கள் இணைந்து குறித்த வாகனத்தையும் வாகன சாரதி மற்றும் உதவியாளர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

சிறுமிகள் தப்பியோடி ஒழிந்த நிலையில் வாகனத்தில் வந்தவர்கள் துரத்தி கொண்டு பின்னாலேயே வந்ததாகவும் வாகனத்தினுள் வெளிநாட்டு நபர் ஒருவர் இருந்ததாகவும் சிறுமி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வாகனத்தை சோதித்த நிலையில் வெளிநாட்டவர் இருக்கவில்லை என்பதுடன் வாகனத்தில் இருந்த இரு சந்தேக நபர்களையும் பொதுமக்கள் பிடித்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply