யாழில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் ஒருவரை காணவில்லை. குருநகர் பகுதியை சேர்ந்த ஜோசப் மக்சிமஸ் சுரேஷ்குமார் (வயது 32) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.

குறித்த இளைஞன் மேலும் இருவருடன் , குருநகரில் இருந்து படகில் கடற்தொழிலுக்கு சென்றுள்ளார். கடலில் படகில் தங்கி தொழிலில் ஈடுபட்ட நிலையில் , இரவு மூவரும் படகினுள் நித்திரைக்கு சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்த போது இளைஞன் காணாமல் போயுள்ளார்.

அதனை அடுத்து இருவரும் கடலில் தேடி இளைஞனை காணாத நிலையில் கரை திரும்பி ஏனைய கடற்தொழிலாளர்களும் அறிவித்து, மேலதிக படகுகளுடன் கடற்தொழிலாளர்கள் கடலில் சென்று தேடுதல் நடத்தியும் இளைஞனை காணவில்லை.

இந்நிலையில் இளைஞன் காணாமல் போன விடயம் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத்துறை , பொலிஸார் கடற்படையினர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply