யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும், மக்களுக்கான முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை ஒரேஇரவில் புல்டோசர்களால் இடித்தழித்து அப்போதைய ஜனாதிபதி கோத்தபாயவின் நம்பிக்கையைப்பெற்றவரும் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் என தன்னை தானே பறை சாற்றிக்கொள்ளும் ஸ்ரீசற்குணராஜா, அடுத்த துணைவேந்தராக வரும் எண்ணத்தோடு காய்நகர்த்தும் இப்போதைய விஞ்ஞான பீடாதிபதி ரவிராஜன் மற்றும் அவருடைய ஆலோசகரான இரசாயனவியல் பேராசிரியை ஆகிய இருவரையும் தனது உத்தியோகபூர்வ காரில் உத்தியோகபூர்வ சாரதியுடன் அழைத்துக்கொண்டு நேற்று மாலை (சனிக்கிழமை, 8/9/24) முன்னாள் அமைச்சர் விஜயகலாவின் யாழ்ப்பாண வீட்டுக்குச்சென்று, கூட்டத்துக்கு முன்னதான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாராம்.
மலர்ச்செண்டும் ஐஸ் கிறீமும் ரணிலுக்கு வழங்கிய ரவிராஜன், ஸ்ரீசற்குணராஜாவைப் போலவே உங்கள் விசுவாசியாக என்றும் இருப்பேன் என்றும் வாக்குறுதி அளித்தாராம். அரசியலில் என்ன நடக்கின்றது என்று இந்த கிணற்றுத்தவளைகளுக்குத்தெரியவில்லை. பதவிகளுக்காக எவர் காலிலும் விழும் இந்தக்கல்வியாளர்கள் இருக்கும்வரை எமது சமூகம் உய்யப்போவதில்லை.
Follow on social media