யாழ். தென்மராட்சி மீசாலை வடக்கு சுடர் ஒளி முன்பள்ளியின் விளையாட்டு விழா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.தென்மராட்சி, மீசாலை வடக்கு, சுடர் ஒளி முன்பள்ளியின் விளையாட்டு விழா யா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று(05) இடம் பெற்றது.

சுடர் ஒளி முன்பள்ளியின் தலைவர் யோ. தயாபரன் தலைமையின் இடம்பெற்ற விளையாட்டு விழாவில், தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் செயலாளர் ந.பாலச்சந்திரன், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் சாவகச்சேரி கிளை நிதியியற்குழு ஆலோசகர் ந.நர்த்தனன், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் க.ரஜனிகாந்தன், மீசாலை வடக்கு கிராமிய அபிவிருத்தி சங்கத் தலைவர் மா. மகேந்திரன், மீசாலை வடக்கு வீரகத்தி விநாயகர் ஆலய தர்மகத்தா சபை செயலாளர் பா. சிவநாதன், பொருளாளர் வி.யோகேஸ்வரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது முன்பள்ளி மழலைகளின் பல்வேறு விளையாட்டுகளும், இசையும் அசைவும் நிகழ்வும் அனைவரையும் கவர்ந்தன.

Follow on social media
CALL NOW

Leave a Reply