இந்தியா குஜாரத்தில் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்துக்குள்ளான விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் விழுத்து எரியும் காணொளிகள் வெளியான நிலையில் தீயணைப்பு வீரகள் அங்கு விரைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அகமதாபாத் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகின்றது.
எச்சரிக்கையைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைவாக அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் விமான விபத்தால் இந்தியாவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow on social media