கணவன் வெளிநாட்டில் – மனைவி படுகொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காலி பகுதியொன்றில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் சடலம் இன்றையதினம் (12-06-2023) காலை வீட்டின் முன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் கொஸ்கொட பிரதேசத்தில் இன்றைய தினம் (12-06-2023) காலை இடம்பெற்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இதுருவ எட்டவலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய படல்கே சாந்தனி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மகள் அம்பலாங்கொட நகரில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாகவும், இன்று காலை மகள் பாடசாலைக்கு சென்ற பின் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ளதாகவும், கொலைக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை சம்பவம் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply