பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம், தென் மாகாணம், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று (02) நண்பகல் 12.30 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தென் மாகாணம் மற்றும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply