gotagogama வில் புதிய தொலைத்தொடர்பு கோபுரத்தால் வெடித்த சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காலிமுகத்திடலில் இன்றைய தினம் 4G, 5G தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டது, இதனை ஆர்ப்பாட்ட கலத்தில் இருந்த இளைஞர்கள் தான் இதனை gotagogama வில் அமைத்தார்கள் என்று ஒரு தவரான செய்தி அங்காங்கே பரப்பப்படுகின்றது.

இதன் உண்மைத்தன்மை என்னவாக இருக்கும். இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய விடயம் இதனை போராட்ட களத்தில் உள்ளவர்கள் அமைக்கவில்லை, இலங்கையில் அலைவரிசை அரச அனுமதியின்றி வேறு யாரும் அதனை மேற்கொள்ள முடியாது.

தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க அதிகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்கள்தான் டயலொக் மற்றும் Mobitel. இந்த ஆரப்பாட்ட இடம் பெரும் பகுதி RDA வின் அதிகாரத்துக்கு உற்பட்ட பகுதி.

இந்த இடத்தில் டயலொக் அல்லது Mobitel நிறுவனங்களுக்கு நினைத்தது போல் அரசின் உறிய அனுமதி இன்றி கோபுரம் அமைக்க முடியாது.

ஆரம்பத்தில் மொபைல் போன் சிக்னல் தடைசெய்ய சமிக்ஞை நெரிசல் பயன்படுத்திய அரசு திடீர் என்று 4G க்கு அனுமதிக்கிறது அதுவும் இவ்வளவு அவசர அவசரமாக என்றால் சிந்திக்க வேண்டிய விடயம் தான்.

சில நேரம் ஒரு இடத்தில் திடீர் என்று மக்கள் சனத்தொகை அதிகரித்து எதிர்பார்த்த அளவை விட கூடுதலானவர்கள் வலைப்பின்னல்லில் இனைந்தால் வலைப்பின்னல் தடைப்பட வாய்ப்புண்டு இந்த காரணத்துக்காக டயலொக் அல்லது Mobitel ஒருதற்காலிகமான கோபுரத்தை அரச உயர் பீடத்திலிருந்து அனுமதி பெற்று அமைத்திருக்கவும் முடியும்.

அது அல்லாமல் அரச புலனாய்வுப் பிரிவு உடனடி அடையாளம் செய்யும் மோப்பம் பிடுக்கும் நடவடிக்கையாகவும் இருக்களாம்.

இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமான கண்காணிப்பில் இலங்கையின் அரச புலனாய்வு பிரிவு ஏற்கனவே படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. என முகநூலில் குறித்த தகவலை ஹைதர் அலி என்ற நபர் பதிவிட்டுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply