உயர்தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வௌியீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

நேற்று (29) இரவு குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்புக்காக 48,810 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று மீள் திருத்தப் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 0112 784 537, 0112 784 208, 0113 188 350 அல்லது 0113 140 314 ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்க முடியும்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply