யாழ் நெல்லியடியில் உடுப்பு கடைக்கு தீ வைத்துக் கொழுத்திய வன்முறைக் கும்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் நேற்று இரவு வன்முறை கும்பல் ஒன்றினால் வர்த்தக நிலையம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

நெல்லியடி நகரில் உள்ள புடவை வர்த்தக நிலையம் ஒன்றுக்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட வன்முறை கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் இலக்கத் தகட்டை மறைத்தவாறு குறித்த வன்முறை கும்பல் வந்ததாக கூறப்படுகிறது. இதேவேளை கடந்த மாதம் இறுதி பகுதியிலும்,

அதற்கு முன்னர் இரு தடவைகளும் மேற்படி புடவை வர்த்தக நிலையம் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting