அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் கங்குலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன சவுரவ் கங்குலி, இன்று காலை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வலி வந்த உடன் கொல்கத்தா வுட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் விரைவாக அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கங்குலி இன்று காலை வீட்டில் உடற்பயிற்சி செய்து வந்தார்.

அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். கொல்கத்தா வுட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அவருக்கு இருதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. கங்குலிக்கு சிறிய அளவில் இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இது எப்போது வேண்டுமானாலும் பெரிய பிரச்சனையாக மாறலாம் என்பதால் மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. மருத்துவர் சரோஜ் மோண்டால் தலைமையில் மூவர் கொண்ட குழு இணைந்து அவருக்கு அந்த சிகிச்சையை செய்ய உள்ளனர்.

அவர் இன்று இரவுக்குள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விடுவார் எனவும் கூறப்படுகிறது. அவர் தற்போது நல்ல நிலையிலேயே இருப்பதாகவும் கொல்கத்தா ஊடகங்கள் கூறி வருகின்றன.

கங்குலியின் நிலை அறிந்த உடன் கிரிக்கெட் உலகில் இருந்து அவருக்காக பிரார்த்தனை செய்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஐசிசி அமைப்பு, இந்திய அணி கேப்டன் விராட் கோலி உட்பட பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டி பதிவிட்டு உள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply