யாழ்ப்பாணத்தின் அநேக பகுதிகளில் இன்று மாலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் இல்லாததால் மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றனர் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 2 கிலோமீற்றர் வரை வரிசை காணப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.
ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என சமூகவலைத்தளங்களில் செய்தி பரவிவந்துதது
இதனையடுத்து இன்று மதியம் முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள ஏராளமான மக்கள் காத்துநிற்கின்றனர்.
அத்துடன் சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் முடிவடைந்து விட்டதாக அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்றையதினம் அநுராதபுரத்திலிருந்து 23 பௌசர்களில், ஒரு பௌரில் 6 ஆயிரத்து 63 லீற்றர் வீதம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் யாழ். மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருட்கள் யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, நாளையும் இதே அளவான எரிபொருள் எடுத்துவரப்பட்டு யாழ். மாவட்டதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதேபோன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் சேமிப்பு நிலையத்திற்கு தொடர்ச்சியாக எரிபொருள் எடுத்து வரப்பட்டு சேமிக்கப்பட்டு வருகின்றது.
ஆகவே யாழ். மாவட்ட மக்கள் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.



