எரிபொருள் விலை குறித்து வெளியான முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலின் நேரடி விளைவாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான், பாரிய எண்ணெய் உற்பத்தியாளர் என்பதுடன், உலகளாவிய விநியோகத்தில் சுமார் 3 சதவீதத்தை கொண்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நான்காவது நாளை எட்டியதால், வர்த்தகத்தில் பிரெண்ட் மசகு எண்ணெய் 0.5 சதவீதம் உயர்ந்து, பீப்பாய்க்கு 75 அமெரிக்க டொலர்களால் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்க மசகு எண்ணெய் 0.7 சதவீதம் உயர்ந்து 73.42 டொலராக விற்பனையாகிறது.

இந்த நிலையில், 2025, ஜூன் மாத இறுதியில் உள்ளூரில் விலைகள் திருத்தப்படும்போது, ​​அது ஒரு பிரச்சனையாக இருக்காது.

ஏனெனில், முந்தைய விலையிலேயே தற்போது எரிபொருட்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன.

அடுத்த கொள்வனவு கட்டளை செய்யப்படும் போது, விலை உயர்வு மேற்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting