பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.
இராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு, இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நாடு முழுவதும் வெடித்த கலவரத்தை தொடர்ந்து அவரது கைது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் கைது செய்து பொலிஸாரின் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இம்ரான் கானை கைது செய்ய முயன்றபோது தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் தாக்கப்பட்டார்.
Follow on social media