வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் புதன்கிழமை (27) காலை பாம்பு கடித்து குடும்பஸ்தர் மரணம் அடைந்துள்ளார்.
பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான 20 வயதுடைய குடும்பஸ்தரே பாம்பு கடிக்கு உள்ளாகினார்.
நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோதே அவர் மரணமடைந்துள்ளார்.
Follow on social media