சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை நீடிக்க தீர்மானம்

ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள், தத்தமது மாவட்ட செயலகத்திற்கோ அல்லது வேரஹெர அலுவலகத்திற்கோ செல்ல வேண்டியது கட்டாயமானது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் அறிவிப்பு
இதனிடையே, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் தற்போதுள்ள சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வௌிநாடுகளுக்கு செல்வோருக்கு மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் 4,50,000 அட்டைகள் அச்சிடப்படுமென மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்பதிவுக்கு அமைவாக, அட்டைகள் அச்சிடப்படவுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply