மின் கட்டணம் 30 வீதத்திற்கு மேல் குறைக்கப்படும் – ஜனாதிபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சுமார் ஒன்றரை ஆண்டுகளில், மின்சார துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். இந்த மின் கட்டணத்தை 30% வீதத்திற்கும் அதிகமாக குறைக்கவுள்ளோம். அதற்கு எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். எரிபொருள் விலையும் அவ்வாறுதான்… இவற்றை நாங்கள் செய்வோம்.”

Follow on social media
CALL NOW Premium Web Hosting