வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் வியாழக்கிழமை (26) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரைநகர் – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், தனியார் பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு வந்த நிலையில், அராலி அம்மன் கோவில் பகுதியில் இருந்து வந்து பிரதான வீதிக்கு நுழைந்த மோட்டார் சைக்கிள் மீது அரச பேருந்து மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயம்டைந்துள்ளதுடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media